பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கட்சிக்கு தேசிய செயற்குழு, தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிரந்தர அழைப்பாளர்கள் போன்றோரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்று நேற்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய செயற்குழுவில் 50 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், 179 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியானது தமிழகத்தில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைபோல் ஹெச்.ராஜா மற்றும் குஷ்பூ ஆகியோர் தேசிய செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தேசிய மகிளா மோர்ச்சா தலைவராக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, தமிழக சட்டமன்ற பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை, தமிழக பாஜக பொதுச் செயலாளராக கேசவ் வினாயகன், தமிழக பாஜக பிரபாரியாக சி.டி.ரவி மற்றும் சுதாகர் ரெட்டி போன்றோரின் பெயர்களும் இடம் பெற்றுயுள்ளது. ஏற்கனவே இவர்கள் அனைவரும் அந்தந்த பதவிகளை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் தேசிய செயற்குழு உறுப்பினராக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நியமிக்கப்பட்டுள்ளார்.