Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ.3000 போதாது ரூ.18,000 வேணும்…. ரசாயனம் தடவிய போலீஸ்…. பொறியில் சிக்கிய VAO…!!!

அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தாலும் இன்னும் ஒரு சில அதிகாரிகள், திரை மறைவாக லஞ்சம் வாங்கி கொண்டு தான் இருக்கின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பாலசுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பக்கத்திலுள்ள கிராமத்தை சேர்ந்த சாரங்கன் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு பட்டா கொடுக்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதற்கு பாலசுப்பிரமணி 21,000 ரூபாய் பணம் கொடுத்தால் தான் பட்டா கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

எனவே சாரங்கன் முதலில் 3000 ரூபாய் பணத்தை பாலசுப்பிரமணியிடம் கொடுத்துள்ளார். மேலும் 18 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா கிடைக்கும் என்று பாலசுப்ரமணி கூறியதால் சாரங்கன் இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் தகவலறிந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ரசாயனம் தடவிய பணத்தை சாரங்கனிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவல்துறையினர் பாலசுப்ரமணியை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |