Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே… மயிலாடுதுறை டூ திருச்சி… வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத ரயில் சேவையை நேற்று கொடியசைத்து எம்பி ராமலிங்கம் துவங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சரியாகி கொண்டு இருப்பதால் தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று அந்தத் தொகுதி எம்பி ராமலிங்கம் ரயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் விளைவாக தற்போது மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு நேற்று முதல் முன்பதிவில்லாத ரயில் சேவை  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிக்கு 9.45 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். அது மட்டுமில்லாமல் தினமும் காலை 5.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் பயணக்கட்டணம் 70 ஆக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென ரயில் நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிலையங்களிலும் ரயில் நின்று செல்ல வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |