திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழா நடந்தது. அதில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவன் இரண்டாமாண்டு மாணவனை ராக்கிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் காயமுற்ற மாணவன் மருத்துவமனை ஐசியூ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே விடுதியில் மாணவர்களிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுதி மாணவர்கள் வெளியேற மறுத்து விட்டனர். இதனால் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் நடந்த பிரச்சனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.