பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 22ஆம் தேதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது குடும்ப மருத்துவர்களும் இத்தகவலை தெரிவித்திருந்தனர்.
இதனால் நவாஸ் ஷெரீஃப் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, னாமா ஆவணங்கள் வெளியானதையடுத்து நவாஸ் ஷெரீஃப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக பிணையில் விடுவிக்கப்பட்டார்.