தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான கருத்துக்களை 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க சிஇஓ – க்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் இதர பல்கலைகழகங்களில் நடப்பு கல்வி ஆண்டிலும் professional English பாடம் கட்டாயம் என்று உயர் கல்விக்கான மாநில கவுன்சிலிங் உத்தரவு பிறப்பித்துள்ளது.