Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. செம குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி உணவுப் பொருள்களை பெறுவதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உணவுப் பொருள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் உணவுத் துறை அறிவித்துள்ளது.

ரேஷன் கடையில் உணவு பொருள் வாங்க முடியாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும். அதனை குறிப்பிட்ட நபர் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பொருள்களை பெற்றுச் செல்ல முடியும். இதன் மூலமாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர வேண்டிய அவசியமில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒரு நபர் பொருள்களை வாங்கிச் செல்லலாம்.

Categories

Tech |