கனடாச் சேர்ந்த பிரபல நடிகர் புளூ ஆரிஜின் நிறுவனம் மூலமாக விண்வெளிக்கு செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமேசானின் தலைவரான ஜெப் பெசோஸூக்கு சொந்தமானது புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் விண்கலம் மூலம் கனடாவைச் சேர்ந்த 90 வயதான பிரபல நடிகர் வில்லியம் சாட்னர் விண்வெளிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நடித்த ஸ்டார் டிரெக் தொடரானது மிகவும் பிரபலமானது ஆகும்.
இவர் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நியூ ஷெப்பர்டு 18 விண்கலம் மூலமாக செல்லும் 4 பேர் கொண்ட குழுவில் ஒருவராக விண்வெளிக்கு புறப்பட இருக்கிறார். இதனால் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் உலகின் வயதான நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.