இந்தியாவில் இருந்து வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகள் இனிமேல் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரிட்டன் அரசாங்கம், இந்திய பயணிகளை தனிமைப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல் பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் இம்முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரிட்டன் அரசானது covid-19 தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
No quarantine for Indian 🇮🇳 travellers to UK 🇬🇧 fully vaccinated with Covishield or another UK-approved vaccine from 11 October.
Thanks to Indian government for close cooperation over last month. pic.twitter.com/cbI8Gqp0Qt
— Alex Ellis (@AlexWEllis) October 7, 2021
இதனை அடுத்து பிரிட்டனின் உயர் ஆணையர் அலெக்சாண்டர் எல்லீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 11ஆம் தேதி காலை 4 மணி முதல் பிரிட்டனுக்கு வரும் கோவிஷீல்டு அல்லது பிரிட்டனின் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்தத் தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள் தனிமை படுத்த மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.