Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 வரை மாணவர்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி 1-8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது, முதல் முறை 1 ஆம் வகுப்பு படிக்க வரும் மாணவர்களுக்கு முக கவசம் சரியாக அணிய தெரியாது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வகுப்பறையில் முக கவசம் அணிந்து இருக்கலாம். ஆனால் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி திறக்கப்பட வேண்டும். மேலும் குழந்தைகள் முக கவசம் அணிந்து நீண்ட நேரம் வகுப்பறையில் இருக்க முடியாத சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு கூறவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |