Categories
உலக செய்திகள்

ஒப்புதல் அளிக்குமா அமெரிக்கா….? இணைந்து செயலாற்றும் தடுப்பூசி நிறுவனங்கள்…. பரிசோதிக்கப்பட்ட குழந்தைகள்….!!

தடுப்பூசி நிறுவனங்கள் இணைந்து 2000த்திற்கு அதிகமான குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மன் நாட்டின் பயோஎண்டெக் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசிகளை 5 முதல் 15 வயதுக்குட்பட்ட 2000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதித்துள்ளனர். ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு மருந்து மட்டுமே பெரியவர்களிடம் பரிசோதிக்கப்பட்டது. இருப்பினும் மருந்தானது 2 தவணை செலுத்தியதற்கே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைத்துள்ளது.

மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அதிக வலிமையுடன் காணப்பட்டனர். ஆனால் அதே சமயத்தில் இளம் வயதினரை போன்று இவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்ற தற்காலிக உபாதைகள் ஏற்பட்டன. தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பெரும்பாலான மேற்கு நாடுகளில் 12வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இன்னும் செலுத்தப்படவில்லை. குறிப்பாக இந்த இரு நிறுவனங்களும் இணைந்து 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் கேட்டு அமெரிக்கா அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

ஒருவேளை இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் விரைவாக 5 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசியானது அவசரக்காலத்தில் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5 முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

Categories

Tech |