Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடனே…. கல்வி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு குழுக்கள் உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க படுவதையும், பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் அனைத்து பெண் போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண்கள் இடம் பெற்று இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான குறைகளை பெறுவதற்கு மாதத்திற்கு ஒரு முறை பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய செல்ல அறிவுறுத்த வேண்டும். கற்பிக்கும்,கற்பித்தல் அல்லாத பணியாளர்கள் பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் அளிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |