புளூ காய்ச்சலினால் இறப்போரின் எண்ணிக்கையானது அதிகளவில் இருக்கும் என்று பிரித்தானியாவின் மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே புளூ காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை அளித்துள்ளனர். மேலும் பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரியான Jonathan Van-Tam கூறியதில் “இந்த ஆண்டு மக்களிடையே குறைந்த அளவில் நோய் எதிர்ப்பு சக்தியானது காணப்படுகின்றது. ஏனெனில் கொரோனா தொற்று பரவலினால் மக்களுக்கு கடந்த ஆண்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தாதே இதற்கு காரணம்.
மேலும் இந்த குளிர்காலத்தில் 60, 000 பேர் உயிரிழக்ககூடும்” என்றும் எச்சரித்துள்ளார். இதனை தடுப்பதற்காக பிரித்தானியாவில் NHS வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் 35 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இலவசமாக தடுப்பூசி பெற தகுதி அடைந்துள்ளனர். இதே போன்று கொரோனவிற்கான பூஸ்டர் தடுப்பூசிகளையும் செலுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 1.7 மில்லியன் மக்கள் இதுவரை மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மேலும் 28 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று இரண்டிற்கும் சேர்த்து தடுப்பூசி செலுத்துங்கள் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் வலியுறுத்தியுள்ளார். அதிலும் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான குழுமத்தின் வழிமுறையின் படி கொரோனா தொற்று தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திய பின்னர் ஆறு மாதத்திற்கு முன்னதாகவே கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தக்கூடாது.