நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு கதை, பாடல் ஆகியவை முக்கியமானது. அதனை விட, அந்தப் படத்தில் உள்ள நகைச்சுவை தான் ரசிகர்களின் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கவுண்டமணி: இவர் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் சிவாஜி கணேசன் மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பில் 1970-ல் வெளியான ”ராமன் எத்தனை ராமனடி” என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
செந்தில்:இவர் 1979ல் வெளியான எஸ்.பி முத்துராமன் இயக்கிய ” ஒரு கோயில் இரு தீபங்கள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களின் நகைச்சுவை காமெடிகள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.
வடிவேலு: இவர் 1991-இல் ராஜ்கிரண் மற்றும் மீனா நடிப்பில் வெளியான ”என் ராசாவின் மனசிலே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதலில் கவுண்டமணி மற்றும் செந்தில் உடன் இணைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நகைச்சுவை நடிகராக நம்மை சிரிக்க வைத்துள்ளார். அதன்பிறகு, வண்டுமுருகன், கைப்புள்ள, ஏகாம்பரம் போன்ற கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மனதில் இன்றளவும் இடம்பிடித்துவிட்டார்.
விவேக்:இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான ”மனதில் உறுதி வேண்டும்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விவேக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் தனது நகைச்சுவையோடு கலந்து அதில் நல்ல கருத்துக்களையும் மக்களுக்கு எடுத்துச் செல்பவர். மேலும், ‘சின்ன கலைவாணன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
சந்தானம்: இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சிலம்பரசன் மற்றும் ஜோதிகா நடித்து இருப்பார்கள். நடிகர் சந்தானம் அவர்கள் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து உள்ளார். மேலும், சந்தானம் இப்போது திரைப்படங்களில் காதநாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.