22 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உத்தரவுப்படி 17 விழுக்காடு மட்டுமே தமிழக நெல்கொள்முதல் நுகர்பொருள் வாணிபத்தல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஈரப்பதம் 20 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளதால், கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் கொள்முதலை துவக்கியுள்ள நுகர்பொருள் வாணிப கழகம் 22 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்தால் தான் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கூறுவதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகள் வாழ்வு வளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.