Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமானை கிள்ளி எறியாவிட்டால்…. இளைஞர்கள் தீவிரவாதிகளாக…. கே.எஸ் அழகிரி எச்சரிக்கை…!!!

சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் பயங்கரவாத பாதைக்கு செல்ல நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 1991-ல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறியுள்ளார். இந்தியாவை பொருத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கான தடை 5 ஆண்டுக்கு ஒருமுறை நீடித்து வருவதாக குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக நாம் தமிழர் இயக்கம் பகிங்கிரமாக செயல்பட்டு வருவதாக அழகிரி குற்றம்சாட்டினார். அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சீமான் செயல்பட்டு வருகிறார்.

எனவே சீமான் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சீர்குலைவு சக்திகளை முளையிலையே கிள்ளி எரியவில்லையெனில், வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்கு செல்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Categories

Tech |