Categories
அரசியல்

இவங்க ராஜீவ் காந்திக்கு பிறந்தவர்களா…? சீமான் மீது நடவடிக்கை எடுங்க…. எம்பி ஜெயக்குமார்…!!!

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், திருவாரூர் எம்பியுமான ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இன்றைய உள்ளாட்சித் தேர்தலில் இங்கே இருக்கின்ற காங்கிரஸ் காரர்கள் எல்லாம் ராஜீவ்காந்திக்கு பிறந்தவர்களா? இவர்கள் எல்லாம் ராஜீவ்காந்தியின் பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்று சீமான் பேசியுள்ளார்.

எங்கள் மீது அவதூறான வார்த்தையும் பயன்படுத்தி பேசி இருக்கிறார் சீமான். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்லி இருக்கிறோம். எனவே சரியான நடவடிக்கையை காவல்துறை எடுக்காவிட்டால் காங்கிரஸ் இயக்கமும், காங்கிரஸ் தொண்டர்களும் அடுத்தகட்ட உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |