Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை ரூ.65 மட்டுமே…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் பெட்ரோல் விலை 35 ரூபாய்க்கு குறைக்கப்பட்டதாக தகவல் பரவியதால், கேரள மக்கள் தமிழகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 குறைந்து முதலமைச்சர் உத்தரவிட்டதாக படத்துடன் வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் பெட்ரோல் விலை 65 ரூபாய் மட்டுமே எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என நம்பி இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக்காடு, சாந்தாம்பாறை உள்ளிட்ட கேரள எல்லையோர மக்கள் ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் வாங்க குவிந்தனர்.

அப்போது அந்தச் செய்தி போலியானது என தெரியவந்தது. அதனால் மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பெட்ரோல் லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்கப்பட்டதாக வந்த செய்தியை நம்பி ஏராளமான மக்கள் குவிந்ததால் சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |