பிக் பாஸ் 5 போட்டியாளர் கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண் கலங்கியபடி பேசியுள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், இன்று வெளியான ப்ரோமோவில் பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசியுள்ளார். அப்போது அவர், என் கணவர் இறந்தபோது கோவம் தான் வந்தது. ஏனென்றால், நிறைய கனவு கண்டோம். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு போய்விட்டார். அவர் என்னை குழந்தை போல பார்த்துக் கொள்வார். என் வாழ்க்கையில் நான் எப்போதும் தனியாக தான் இருக்க வேண்டும் என்று இருக்கிறதோ என கவலையுடன் பேசியுள்ளார்.