14-வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று 2 லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது .இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி புள்ளி பட்டியல் 6-வது இடத்தில் உள்ளது .அதேபோல் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது .இதுவரை இரு அணிகளும் 17 முறை நேருக்கு நேர் மோதியதில் 9 முறை மும்பை அணியும் , 8 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிகக் கடினமாக உள்ளது.
இதையடுத்து துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன .நடப்பு சீசனில் இரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேசமயம் டெல்லி அணி குவாலிபயர் 1 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியதில் பெங்களூர் அணி 16 முறையும் , டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது .இதனால் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்கும்.இந்திய நேரப்படி இப்போட்டியில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறுகிறது.