Categories
மாநில செய்திகள்

முதற்கட்ட தேர்தலில் 77.43% வாக்குப்பதிவு…. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊராட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

அதில் 77.43% வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 84.30%, செங்கல்பட்டில் 66.71%, வேலூரில் 77.63%, ராணிப்பேட்டையில் 80.89%, விழுப்புரத்தில் 83.66%, கள்ளக்குறிச்சியில் 82.25%, நெல்லையில் 70.81%, தென்காசியில் 73.96% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |