Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 10 முதல் 12 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை தொடரும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |