Categories
உலக செய்திகள்

“தற்போது புதிய விதிமுறைகள் விதிக்கப்படாது!”.. அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாகாணம் அறிவிப்பு..!!

கனடாவின் ஒரு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கனடாவின் Saskatchewan என்ற மாகாணத்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, 4313 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதே நேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

பெடரல் அரசு, கடந்த ஒரு வாரத்தில் நாட்டிலேயே Saskatchewan மாகாணத்தில் தான் கொரோனாவால் அதிக நபர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவர்களும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்கள். எனினும், ஏற்கனவே பல விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது.

மேலும் அதிகமான மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். எனவே தற்போதுள்ள விதிமுறைகள் தான் தொடரும். புதிய விதிமுறைகள் தற்போது விதிக்கப்படாது என்று அம்மாகாணத்தின் பிரீமியர் Scott Moe கூறியிருக்கிறார்.

Categories

Tech |