மனைவியை சிலிண்டரால் தாக்கிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை கோபால் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கோபமடைந்த கோபால் கேஸ் சிலிண்டரால் அனிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அனிதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபாலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.