Categories
சினிமா தமிழ் சினிமா

‘பஹிரா படத்தின் கடைசி 7 நாட்களை மறக்க முடியாது’… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன தகவல்…!!!

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பிரபு தேவா நடிப்பில் பஹிரா திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அமைரா, சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி, காயத்ரி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

Back to back shoot for Prabhu Deva's 'Bagheera' | Tamil Movie News - Times  of India

இதில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘பஹிரா படத்தில் கதாநாயகிகளே கிடையாது. அனைவருமே திறமையான நடிகர்கள். பிரபு தேவாவுக்கும், அமைராவுக்கும் அதிகமான காம்பினேஷன் சீன்கள் இருக்கிறது. நடிகை அமைராவிற்கு தமிழ் தெரியாது. நான் சொன்னதை கேட்டு அவர் திறமையாக நடித்து கொடுத்தார். இந்த படம் உருவாவதற்கு பிரபு தேவா தான் முக்கிய காரணம். அவரிடம் சீன் சொல்லி நடிக்க சொல்ல பயந்தேன். அவர் என் பயத்தை போக்கினார் . பஹிரா படத்தின் கடைசி 7 நாட்களை என்னால் மறக்க முடியாது’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |