திருமண நிகழ்ச்சியில் தங்க நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் சிந்தாமணி என்னும் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காமெடி நடிகரின் குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தங்க நகைகள் திருடபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியில் வசித்து வரும் விக்னேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். அதன்பின் அவரை சிறையில் அடைத்து வைத்துள்ள நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தியின் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது அங்கு ஆஜரான அரசு வக்கீல் மனுதாரரின் தந்தை மற்றும் குடும்பத்தினர் நகைக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதேபோல மனுதாரர் பல நிகழ்ச்சிகளில் நகையைத் திருடி வந்துள்ளதாக வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மனுதாரரின் தரப்பு வக்கீல் விக்னேஷின் தந்தை அல்லது அவரது குடும்பத்தினர் அவருக்கு ஜாமீன் உத்தரவாதம் அளிக்க தயாராக உள்ளனர் என்று தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார். இந்த வழக்கினை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.