தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து முதற் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.