முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுவது கண்காணிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்த குழுவில் டி.ஆர் பாலு, எஸ்.எஸ் பழனிமாணிக்கம், ஆர்.எம் செல்வராஜ், ஆ.ராசா, பி.ஆர். நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவீந்திரநாத் குமார், நவாஸ் கனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்..
மேலும் திருச்சி சிவா, ஆர் எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம், எம்எல்ஏக்கள் விஜி ராஜேந்திரன், நா எழிலன், நீலமேகம், பூமிநாதன், ஜெ.எம்.எச் அசன் மெளலானா ஏ.கே செங்கோட்டையன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.. ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை இந்த குழு அடையாளம் காணும்..