குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
அதன்பிறகு 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.அதன் பிறகு அடுத்த வாரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.