யுபிஐ சேவையால் இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை அபார வளர்ச்சி கண்டு இருக்கும் நிலையில் மோசடிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
UPI (Unified Payments Interface) என்று அழைக்கப்படும் யுபிஐ சேவை கடந்த 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சேவையை மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட NPCI என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்க UPI சேவையும் முக்கிய காரணம். அந்த அளவுக்கு UPI சேவையால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது ஆன்லைன் பரிவர்த்தனை. UPI அறிமுகப்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளில் சுமார் 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் 500 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
UPI வழியாக கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 114 கோடி பணம் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 130 சதவீதம் அதிகம். கடந்த அக்டோபரில் 114 கோடி பணம் பரிவர்த்தனை வழியாக சுமார் 1.91 லட்சம் கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கிறது. கடந்த செப்டம்பரில் கைமாறிய 1.46 லட்சம் கோடி ரூபாய் தொகையுடன் கணக்கிட்டால் அக்டோபரில் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை 30 சதவீதம் அதிகம். கடந்த 2018- 19 ஆம் நிதியாண்டில் யூபிஐ வழியாக நடக்கும் பண பரிவர்த்தனை எண்ணிக்கை டெபிட் கார்டுகள் வழியாக நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை விட 1.2 மடங்கு அதிகம் என்கிறது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை.
இப்படி அபார வளர்ச்சி கண்டிருக்கும் UPI பண பரிவர்த்தனையில் மோசடிகளும் நடைபெறுவது அதிர்ச்சிக்குரிய உண்மை. UPI பயன்பாட்டாளர் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான் மோசடிகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே யுபிஐ மோசடிகளில் இருந்து எப்படி காத்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.
டெபிட் கார்டு வங்கிக் கணக்கு விவரங்களை அறிமுகம் இல்லாதவர்களிடம் தெரிவிக்க வேண்டாம்.
யுபிஐ கணக்கை அடுத்தவர் உதவியின்றி சொந்தமாக பதிவு செய்யுங்கள்.
புதிய VPA சேவையைப் பயன்படுத்தும் பயனர்களையே மோசடி நபர்கள் குறி வைக்கின்றனர்.
SMS மூலம் வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.
சந்தேகப்படும்படியான OTP எண்கள் மொபைல் எண்ணிற்கு வந்தால் வங்கியில் புகார் தெரிவிக்கவும்.
OTP எங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
இந்த எச்சரிக்கைகள் பேடிஎம் , கூகுள்பே , PAYTM , போன் பே மற்றும் பிற UPI அடிப்படையிலான கட்டண பயன்பாடுகளை பயன்படுத்தும் பயனாளர்கள் பொருந்தும்.
எனவே ஆன்லைன் பரிவர்த்தனையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் வலியுறுத்தும் கோரிக்கையாகும்.