காருக்கு காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் அரசு பணத்தில் மாற்றியது குறித்து எழுந்த விமர்சனத்திற்கு கேரள அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மின் துறை அமைச்சரான மணி தனது இன்னோவா காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் மாற்றி உள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்தது. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டயருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் காரின் டயர் விவகாரம் அம்மாநிலத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இது பொதுமக்களையும் வியப்படையச் செய்தது. இந்த விமர்சனம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மணி தனது காருக்கு 34 டயர் மாற்றியது உண்மையே ! என்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களுக்கு அரசு பணிக்காக அதிக பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் காரின் டயர்கள் சேதம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.