Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நான் சாமியிடம் கேட்டேன்” பேரனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமங்கலம் கிராமத்தில் பழனிவேல்-தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றான். கடந்த சில வருடங்களுக்கு முன் பழனிவேல் உயிரிழந்து விட்டார். இதனால் தனலட்சுமி தன் மகன் அஜித்துடன் அவரது தாய் செல்லம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து தனலட்சுமியும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களில் வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டி செல்லம்மாளை அஜித் சிறு வயதிலிருந்தே கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வந்தார். இந்நிலையில் அஜித் வீட்டின் முன்பகுதியில் தீ புகைந்து கொண்டு இருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது செல்லம்மாள் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த பாத்திரங்கள், மளிகை பொருட்கள் மற்றும் அஜித்தின் உடைகள் எரிந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அஜித் கூறியதாவது “நான் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது என் பாட்டி இறந்து கிடந்தார். இதனைத்தொடர்ந்து நான் சாமியிடம் இதுகுறித்து கேட்டேன். அதற்கு சாமி வீட்டில் எதையும் வைக்காமல் அனைத்தையும் எரித்துவிடு என்று என்னிடம் கூறியது. இதனால் வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் பாட்டியோடு சேர்த்து எரித்து விட்டேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித் உடல்நலம் பாதிக்கப்பட்டவரா  என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |