Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சேனலின் முக்கிய சீரியல்கள் நிறுத்தம்…. ஷாக் ஆன ரசிகர்கள்….!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களை நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல்கள் என்றாலே சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்கள் தான் மக்கள் மனதில் நினைவுக்கு வரும். அந்த வகையில், பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் உள்ளனர்.

இதனிடையே, இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களை நிறுத்த போவதாக இந்த தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘சத்யா’ மற்றும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல்களை நிறுத்தப்போவதாக ஜீ தமிழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24 ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும் எனவும், அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/p/CUwfs9BrDHN/

Categories

Tech |