Categories
உலக செய்திகள்

மீண்டும் அனுப்பப்பட்ட தூதர்…. பிரான்ஸ் அரசின் நடவடிக்கை…. வரவேற்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர்….!!

பிரான்ஸ் ஆஸ்திரேலியாவுக்கான தனது தூதரை மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்சிடமிருந்து நீர்மூழ்கி கப்பல் வாங்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய ரத்து செய்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளும் இணைந்து அக்கோஸ் என்னும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.

இதனால் பிரான்சுக்கு ஆஸ்திரேலியா மீது கோபம் வந்தது. மேலும் பிரான்ஸ் தனது தூதரை ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் பிரான்ஸ் தனது தூதரை மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் மாரிஸ் பெய்ன்  வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |