மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைமகள் என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் கலைமகள் தனது 4 வயது மகனுடன் நிலத்தில் இருக்கும் தென்னந்தோப்புக்கு சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் அதை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கலைமகளை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் கலைமகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு மருத்துவரிடம் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.