Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 மணிநேரம் தொடர்ந்த நிகழ்ச்சி…. உலக சாதனை படைத்த நாட்டுபுற கலைஞர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

சுமார் 8 மணிநேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திய நாட்டுபுற கலைஞர்களை உலக சாதனை புத்தக பதிப்பாசிரியர் கண்காணித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரமணமுதலிபுதூரில் உலக சாதனைக்காக நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கையை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 26 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிவன், பார்வதி, கருப்புசாமி ஆகிய தெய்வங்களின் வேடங்களை அணிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இடைவிடாது 8 மணி நேரம் அவர்களது இசைக்கருவிகளை பயன்படுத்தி பக்தி பாடல்களை பாடி உலக சாதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியை உலக சாதனை புத்தக பதிப்பாசிரியரான தியாகு நாகராஜன் கண்காணித்துள்ளார். காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி மாலை 5 மணி வரை தொடர்ந்து 8 மணி நேரம் பாடல்களை பாடி நாட்டுப்புற கலைஞர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு சான்றிதழ்களும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  கொரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Categories

Tech |