நவராத்திரி உற்சவத்தை கோவிலில் உதவி ஆணையராக பணிபுரியும் ஜெயா ஏற்பாடு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வருடம் தவறாமல் புரட்டாசி மாதத்தில் வரும் பத்தாவது நாள் நவராத்திரி உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடமும் நவராத்திரி உற்சவம் தொடங்கி 14-ஆம் தேதி அன்று முடிவடைந்துள்ளது. அப்போது அதிகாலை நேரத்தில் நடை திறக்கப்பட்டு சாமிகளுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாலை நேரத்தில் பெருமாள் உள்பட 3 சாமிகளுக்கு தங்கக் கேடயம் மற்றும் அமிர்தவள்ளி தாயாருக்கு வேறொரு தங்க கேடயத்தாலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் இசைக்க கோவில் வளாகத்தில் மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளனர். மேலும் இந்த உற்சவத்தில் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர்.