Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு…. ஐ.நா பொது செயலாளர் இரங்கல்….!!

பாகிஸ்தானில் ஆற்றல் மிக்க நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஐ.நா பொது செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி தெருவீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் உயிரிழந்ததாகவும் 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து ஆன்டனியோ கட்டிரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் மற்றும் சேதம் ஏற்பட்டதற்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் எனது நினைவுகள் உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |