கொலை வழக்கில் கைதான 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திம்மராஜபுரம் பகுதியில் சுந்தரபாண்டியன், முத்துக்குமார், பழனி, நாராயணன், ஸ்ரீ ராம்குமார், மாணிக்கராஜா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கிமுத்து என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இதனால் காவல்துறையினர் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சுந்தரபாண்டியன், முத்துக்குமார், நாராயணன், ஸ்ரீ ராம்குமார், மாணிக்கராஜா ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.