உரிய ஆவணம் எதுவும் இன்றி எடுத்து வந்த 2,54,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2-வது கட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக பறக்கும் படை அதிகாரி மற்றும் தாசில்தார் மணிகண்டன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி அருள்பிரகாஷ் என்பவர் 2,54,000 ரூபாய் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலர் பழனிவேலிடம் ஒப்படைத்துள்ளனர்.