Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

கிணற்றில் பிணமாக மிதந்த வழக்கில் உறவினர்கள் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அலங்காரப்பேரி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துராமலிங்கம் திரும்பி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் முத்துராமலிங்கத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்து கிணற்றில் அவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கங்கைகொண்டான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முத்துராமலிங்கத்தின் மனைவி, உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் அப்பகுதியில் திரண்டு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை தட்சண மாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையறிந்த கங்கைகொண்டான் மற்றும் சீவலப்பேரி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுவதாவது, முத்துராமலிங்கம் கிணற்றில் தடுமாறி விழுந்து தற்கொலை செய்ததாக தெரியவில்லை.

அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர். எனவே காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சரியான விதத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அது வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் 2 நாட்களுக்குள் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் கங்கைகொண்டான்-மதுரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அவர்கள் சாமியானா பந்தல் அமைத்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |