Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை…. கடத்தி சென்ற பெண்…. பரிதவித்த தாய்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பர்மா காலனியில் குணசேகரன்(24) என்பவர் வசித்து வந்தார்.இவர் டைல்ஸ் போடும் தொழிலை செய்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி. இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து ஒரு பெண் அவருடனே இருந்துள்ளார். உடனே ராஜலட்சுமி அந்த பெண்ணின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இதையடுத்து ராஜலட்சுமியை அந்த பெண் குளிக்க செல்லுங்கள் நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியதை நம்பிய ராஜலட்சுமி குளிக்கச் சென்றார். இந்நிலையில் அந்தப் பெண் 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.

அதன்பிறகு குளித்துவிட்டு வந்த ராஜலட்சுமி தன் குழந்தையை காணாததை அறிந்து அக்கம் பக்கத்தில் விசாரித்து பல இடங்களைத் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காததால் உடனை தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பிறகுதான் அந்த பெண்ணின் மீது ராஜலட்சுமி சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கணவரிடம் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |