தொடர்ந்து பெய்த கனமழையால் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 200-க்கும் அதிகமான கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. ஆனால் கடந்த சில தினங்களாக இம்மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பெய்த தொடர் கனமழையால் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகி விட்டது.
இதில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்து விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர். இது தொடர்பாக விவசாயி ஒருவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்து மழையில் நனைந்து வீணாகி நாசம் அடைந்துள்ளது.
இதனால் என்னை போன்ற பல விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அரசு அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுகிறோம் என தெரிவித்துள்ளார்.