Categories
அரசியல் மாநில செய்திகள்

சூப்பர் மேடம்…! இது தான் என் வாட்ஸ்அப் நம்பர்…. உங்க குறையை இதுல சொல்லுங்க…!!!

கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள வானதி சீனிவாசன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், கமலஹாசனை கடைசியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கோவை தெற்கு பகுதியை இனி வர இருக்கும் தேர்தல்களிலும் பாஜகவின் சாம்ராஜ்யமாக மாற்ற திட்டமிட்டு வருகின்றனர்.

அதேபோன்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்காக வானதி சீனிவாசன் குரல் கொடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த வானதி சீனிவாசன் அதை சீரமைக்க ஏதுவாக மக்களுக்கு தன்னுடைய அலுவலக வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டுள்ளார். அதில் கோவை தெற்கு பகுதியில் புதிய தார் சாலை அமைப்பது, தெருவிளக்குகள் அமைப்பது போன்ற கோரிக்கைகளுக்கு 72003 31442 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |