Categories
தேசிய செய்திகள்

“ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை உடனே நீக்குங்க”… பிரதமருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை நீக்க வேண்டும் என கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருக்கும் பரத் சிங் குண்டன்பூர் என்பவர் மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தங்களது நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறவில்லை. மக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்களை நிறைவேற்றுவதற்கு தற்போது பழகிவிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை 616 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் இரண்டு ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் லஞ்சமாக 500 மற்றும் 2000 நோட்டுகள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் இந்த நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை நீக்க வேண்டும். ஏனெனில் இது மகாத்மா காந்திக்கு மிகப்பெரிய அவமரியாதை. இதன் காரணமாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி மற்றும் அசோகச் சக்கரத்தின் படத்தை நீக்கி விட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ஏழைகளின் நோட்டாக விளங்கும் 5, 10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளில் மட்டும் மகாத்மா காந்தியின் படத்தை பதிக்க வேண்டும். அதுதான் நம் மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும் என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |