தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து முதற் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவித்தனர். மேலும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் இன்று டாஸ்மாக் மது கடைகள் மற்றும் பார்கள் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் வருகின்ற 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.