தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக 5 கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவை சென்னை கொளத்தூரில் எவரெஸ்ட் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பிளிக்கை என்ற இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரி என்ற பெயர்களில் அந்த 4 கல்லூரிகளும் தொடங்கப்பட்டது.
மேலும் அந்த 4 கல்லூரிகளிலும் பி.காம், பிசிஏ, பிபிஏ, பிஎஸ்சி, பாடப்பிரிவுகளில் மாணவர்கள் உடனடியாக சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 4 கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் எனவும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.