Categories
சினிமா தமிழ் சினிமா

கருக்கலைப்பு செய்ததாக பரவிய வதந்தி… பதிலடி கொடுத்த சமந்தா…!!!

தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரித்தனர். மேலும் இவர்களது விவாகரத்து குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திரைப்படங்களில் சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பது நாக சைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை, தன்னைவிட சமந்தா அதிக படங்களில் நடிப்பது நாக சைதன்யாவுக்கு பொறாமை என பல்வேறு வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘பொய்யான வதந்திகளுக்கு எதிராக என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, கருக்கலைப்பு செய்தேன் என வதந்திகள் பரவி வருகிறது. விவாகரத்து மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும். இது போன்ற தாக்குதல்களிலிருந்து நான் என்னை பாதுகாத்துக் கொள்வேன். நான் உடைந்து விடமாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |