Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடலையா அப்போ ஆபீஸ் வரவேண்டாம்… டெல்லி அரசு அதிரடி உத்தரவு….!!!

தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது அம்மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் யாரும் அக்டோபர் 16ந்தேதி முதல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டெல்லி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை விடுப்பில் இருப்பதாகவே கருதப்படுவார்கள்.

அதில் அக்டோபர் 15ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாத ஊழியர்கள் அக்டோபர் 16ந்தேதி முதல் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வரை அந்தந்த அலுவலகங்கள், சுகாதார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரிய அனுமதிக்கப்பட
மாட்டார்கள். இது சம்பந்தமாக அந்தந்த துறைகளின் தலைவர்கள் தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களை ஆரோக்கிய சேது செயலி அல்லது தடுப்பூசி சான்றிதழ் மூலம் சரிபார்ப்பார்கள்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே தங்கள் பணிபுரியும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |