Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

18 மாதங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும்  கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து சேவை  நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு  படிப்படியாக குறைந்துள்ளதால் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் பயணிகள் ரயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்கு அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு வலியுறுத்தி வந்ததனை அடுத்து வழித்தடங்களில் நேற்று முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் திண்டுக்கல் – திருச்சி பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தினந்தோறும் 6:15 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு 8.25 மணி அளவில் திருச்சியை சென்றடையும். பின்னர் மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்து சேரும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

முதல்நாளான இன்று குறைந்த அளவு பயணிகளுடன் ரயில் சென்றது. மேலும் எக்ஸ்பிரஸ் ரயில் சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டுள்ளதன் மூலமாக காலையில் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |